Wednesday, June 30, 2010

உன்னிடம் மயங்குகிறேன்...!!!


உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...



எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?



நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..




நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....




எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...




நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?



அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..



நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...



"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...

இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?


என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...


நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில்
தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தை என்ன செய்யலாம்..?
அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து
அணைத்து விடட்டுமா
உன்னைப் போலவே..?



இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்...
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே...


சரியான திருடன்டா நீ
என சொல்கிறாய்
அடிபாவி... உன்னிடம்
திருடிய முத்தங்களை
உன்னிடம் தானே
கொடுக்கிறேன்..
இதற்கே இப்படி திருட்டுப்பட்டம்
கட்டினால் அப்புறம்
கொள்ளைக்காரனாகிவிடுவேன்
ஜாக்கிரதை...


இரவுகள் எல்லாம் தீர்ந்த
பின்னும் பேசிக்கொள்ள
நமக்கு என்னெல்லாமோ
இருக்கின்றன...
ஆனாலும் சலிப்பதேயில்லை
நிறுத்தவும் மனதேயில்லை
உன் கொஞ்சலான
முத்தங்களைப்போல...


காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...


எப்பொழுதும் உன் அணைப்புக்குள்
இருக்கவேண்டும் என்ற
பேராசையெல்லாம்
எனக்குக் கிடையாது...
உன் கழுத்துச் சங்கிலியின்
மையமாக என்னைத்
தூக்கிலிட்டாலே போதும்...
பிழைத்துக் கொள்வேன்...


இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்...
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி...


அச்சசோ இந்த சுரிதார்
கொஞ்சம் சின்னதாகிடுச்சுடா
என அழகான முகம் சுழித்துச்
சொல்கிறாய்...
இப்படி இருமுனைத் தாக்குதல்
நடத்தினால் என்ன
சொல்வது நான்...
திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்...


கல்யாணதுக்கு அப்புறமும்
என்னை இதே மாதிரி
காதலிப்பாயாடா என
நீ கேட்டாயல்லவா...?
கண்டிப்பாக இதே மாதிரி
காதலிக்க மாட்டேண்டி..
வேற மாதிரி தான் காதலிப்பேன்
என கண்சிமிட்டிக்கொண்டே
சொன்னபோது மீண்டும் உன்
வெட்கம் திருடிய இன்பம்
அடைந்தேன்...

கவிதைகள்..!!












Tuesday, June 29, 2010

என்ன நண்பர்களே நீங்கள் இந்த வரிசையில் எத்தனையாவது....??

web counter html code

myspace web counter

கை கொடு... !


உன்
அசட்டுக்
கன்னக் குழிகளில்
தடுக்கி விழுந்தவன்
இன்னும்
எழவில்லை
வாழ்க்கைக்கு கூட
வேண்டாம்
எழுவதற்காவது
கை கொடுத்துவிடு
கவிதையே

Monday, June 28, 2010

மழை போல தான் நீயும்...............!!!

நீ என்னை நேசிக்கவே
யோசிக்கிறாய்.......
நான் உன்னை சுவாசிக்கவே
யாசிக்கிறேன்...


உன்னை கண்டுபிடித்தேன்.......
என்னை தொலைத்து.....
உயிர் உறையும் குளிரிலும்
உன் இதழ் தரும் வெப்பம் போதும்......


கண்ணை மூடும் போது
மட்டும் இல்லை
கண்ணை திறந்திருக்கும் போதும்
நீ மட்டும் தான்
எதிரினில் தெரிகிறாய்....


நினைவில் தீயாய் நீ
உருகுகிறேன் நான் மெழுகாய்.....
கடலுக்குள் கலக்கும்
சூரியனைப்போல்
உனக்குள் கலந்திட ஆசை.........


மற்றவர்கள்
பதிக்கத்தான்
முயல்வார்கள்....
ஆனல் நீயோ
புதைத்து விட்டாய்
என்னுள் உன்னை.....

காதல் என்னவென்று
உன் கண்களை காணும் வரை
தெரியவிலை
உன் கண்களை கண்ட பிறகு
வேறெதுவும் தெரியவிலை!

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன்
கைகள் தானாய் கிறுக்கியது
என்னவளின் பெயரை....


நீ தந்த
நினைவுகள்
மறப்பதில்லை
இறப்பதுவுமில்லை....
நாளைதான் நீ வருவாய்
நாளை எப்போது வரும்?????


காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன்


என்னை மட்டும்
திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை....


உனக்கும் எனக்குமான
இடைவெளியில் இருப்பது
வேறொன்றும் இல்லை
நம் நெருக்கத்தை தவிர....


தேவையான
பல விடயங்களை
மறந்து போகிறேன் நான்
உனது நினைவுகளை தவிர...


கனவுகள் உயிரோட்டமாய்
உணர்வுகள் உயிரோவியமாய்
இதயத்தில் இதமான நினைவுகளாய்


என்றென்றும் என்னவள்
நீ வந்து போன
தடமெல்லாம்அழிச்சிடத்தான்
நெனச்சிருந்தேன்...
நீ வந்த தடமிருக்கு...
போன தடமில்லையே...


இன்னும் என்உசுருக்கள்ளே இருக்கியோ
இப்படியேஎன் உசுர எடுப்பியோ......
என்னருகே நீயிருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
கரைகின்றேன் உனக்குள்ளே
அன்பே நீ அறிவாயா


என்னுயிரும் உரைக்கிறதே
உன் விரல்கள் தொடுகையிலே
உன் மூச்சில் நான் வாழ
என்னுள்ளே ஸ்வாசிப்பாயா
சுதந்திரம் வேண்டும் எனக்கும்......
சிறைகொள்ளவா - உன் கைகளுக்குள்......


மழை போல தான் நீயும்
சில நேரம் தவிக்க விடுகிறாய்
சில நேரம் மூழ்கடிக்கிறாய்

மழை போல தான் நீயும்
சில நேரம் குடை பிடித்தாலும்
நனைத்து விட்டு போகிறாய்

மழை போல தான் நீயும்
சில சமயம் தீ தேட வைக்கிறாய்

மழை போல தான் நீயும்
மிடறுகளில் முடிவதில்லை
உன் மேலான தாகம்

மழை வரும்போதெல்லாம்
உன் ஞாபகம் போல
உன் ஞாபகத்தில் எல்லாம்
மழை பொழிகிறது
பாதி நேரம் உன்னை
மறக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்................

ரோஜாவும் நீயும்..!!!

துடிதுடிக்கிறேன்





உன் நினைவுகளில்....!





நீ இல்லா நேரங்களில்....!





ரோஜாவும் நீயும்..!!!

உன் குற்றமா..? என் குற்றமா..??

சொல்லிச் செல்...!!!





கருகிய காதல்...!!





நீ அறிந்ததில்லை...!!!




உன் குற்றமா..? என் குற்றமா..??




ஏனோ.. நீ..!!

ஸ்ரீ ராம ஜெயம்.

அர்த்தம் என்ன...?

அணைத்துப் பேசிய உன்
அருகாமைகளின் அர்த்தம் என்ன?


மோகத்தில் நீ கொடுத்த
முத்தங்களின் மொழி என்ன?


ஏக்கத்துடன் நீ பார்த்த
பார்வைகளின் பொருள் என்ன?


காதலில் நீ கொடுத்த
கனவுகளின் கதி என்ன?


காதல் தேர்வில்
விடையேதும் தெரியா மாணவன் நான்..


சொல்லிவிட்டுப் போயேன்
கைவிட்டுச் சென்ற காரணத்தையாவது..

என்னவளே...!

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும்
உனது சொற்கள் எனது
நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை
சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்

Sunday, June 27, 2010

காதலில் காமம் கலந்தால்...!!!

காதலி அணியும் ஆடை தான் முக்கிய காரணம். அந்த ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால் காதலன் எல்லை மீற மாட்டான்.

நண்பகல் ஆரம்பமாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கையைத் தவிர்த்து காலையிலும், மாலையிலும் பரபரப்பாகக் காணப்படும் மெரீனா கடற்கரையில் ஆங்காங்கே காதலர் முளைத்திருந்தார்கள்.

சிலர் உச்சி வெயிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெயிலுக்கு பயந்து அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

இப்படியாக மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்திருந்தார்கள் அவனும் அவளும்.

கையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்துப் பிடித்துக்‌ கொண்டாள் அவள். அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் அவன்.

அந்த சின்னக்குடை தந்த நிழலில் கையோடு கை உரசிக் கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால் அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மௌனப் போராட்டம் நடத்தின வார்த்தைகள்.

சிறிது தூரம் தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அவளது மென்மையான பிடியை விட்டு விலகி தனியாகப் பறந்தது குடை. அதைப் பிடிக்க இருவரும் ஓடினர். சிறிது தூரம் ராக்கெட் ‌ வேகத்தில் பறந்த குடை பயனற்றுக் கிடந்த ஒரு படகின் மீது மோதிக் கொண்டு நின்றது.

கைநழுவிப் போன குடையை எடுத்துவிட்டு நிமிர்ந்தபோது தான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்தக் காட்சியைக் கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் மூடி காதல் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான் காதலன்.

அதைப் பார்த்த மாத்திரத்தில் இவர்கள் இருவரும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.

இருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பதிவாகி இருந்ததால் அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணை போட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.

மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிப் போன அவளது டைட் ஜீன்ஸ் பேண்டும் அவனை என்னமோ செய்தன. அவள் மீது கணப்பொழுது மோகம் கொண்டவன் எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் “இச்” மழை பொழிந்து விட்டான்.

அவன் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அவள் சட்டென்று எழுந்து விட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவது போல் கையைத் தூக்கினாள்.

“நீ இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ சொன்ன முதல் நாள்லயே நீ இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே , ஏன்... இந்த நிமிடமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரே... நான் யாரோ..” என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள்.

இப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக் கொள்வது இந்த விடயத்தில்தான். “என்னைப் பார்த்து அவன் காதலிக்கவில்லை... என் உடலைப் பார்த்துத்தான் காதலித்து இருக்கிறான்...” என்று இந்த விடயத்தில் காதலிகள் குற்றம் சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விடயம் தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்தது தான்.

நெய் வேண்டும் என்றால்... பாலை முதலில் நன்கு காய்ச்ச ‌ வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டு வரும். அந்த வெண்ணெயை உருக்கினால் தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.

காமமும் அப்படியே..! காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டு விடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகு தான் அதை அரங்கேற்ற வேண்டும். அது தான் உண்மைக் காதலுக்கு அழகு.

அதற்கு என்ன செய்யலாம்...????

  • முக்கியமாக, காதலர்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமன்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு அவர்கள் அணியும் ஆடைதான் காரணம். ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீறமாட்டான்.

  • காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்தக் கண்களின் பார்வையில் திருமணம் கைகூடும் வரையில் ஆபாசம் வெளிப்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

  • காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும் போது அவளது கண்ககைப் பார்த்தே பேசப் பழகிக் கொள்ளுங்கள். அந்த “கண்ணோடு கண்ணான பார்வை” உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும்.

  • காதலி அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாகத் தெரிந்தால், கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். அவள் உண்மையைப் புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்லெண்ணமும் அவளிடம் அதிகரிக்கும்.

  • ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் “கடலை” போட்டாலும் காதலியிடம் பேசும் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அப்போது அவளை அழகாக வர்ணிக்கலாமே தவிர, ஆபாசமாக வர்ணிக்கக் கூடாது.

  • காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல.

  • பார்க், பீச், ஹோட்டல் ... என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் லாட்ஜில் ‌ ரூம் போடும் ஆசை மட்டும் எழுந்து விடக் கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.

நன்றி. - தினத்தந்தி-

Saturday, June 26, 2010

தொழிலும் பெயர் பொருத்தமும்..!!

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்ததிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

பாரசீகர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் செய்யும் தொழிலை குடும்பப் பெயர்களாக வைத்திருப்பார்கள். உதாரணம்: ஜேம்ஸ் குக், ஜான் பார்பேர், டவே ஸ்மித்.

தமிழில் அது போல பெயர் பொருத்தம் ஒரு கற்பனை, நகைச்சுவைக்கு மட்டுமே, (யார் மனதையும் புண்படுத்த அல்ல)

மருத்துவர்---------------------வைத்யநாதன்
பல் மருத்துவர்-----------------பல்லவன்
கண் மருத்துவர்----------------கண்ணாயிரம்
நரம்பியல் நிபுணர் -------------நரசிம்மன்
வக்கீல்------------------------கேசவன்
வட இந்திய வக்கீல்-------------பஞ்சாபகேசன்
நிதியாளர்----------------------தனசேகரன்
இருதய நிபுணர்-----------------இருதயராஜ்
குழந்தைநல மருத்துவர்---------குழந்தைசாமி
மனநல மருத்துவர்--------------மனோ
பாலியல் நிபுணர்----------------காமேஸ்வரன்
கல்யாண புரோக்கர்-------------கல்யாணசுந்தரம்
காது மூக்கு தொண்டை நிபுணர்--நீலகண்டன்
சர்க்கரை நோய் மருத்துவர்------சக்கரபாணி
ஹிப்நோடிச்ட்------------------சொக்கலிங்கம்
மூளை நிபுணர்-----------------புத்திசிகாமணி
மேஜிக் நிபுணர்-----------------மாயாண்டி
கட்டிடக் கலை வல்லுநர்--------செங்கல்வராயன்
வெள்ளை அடிப்போர் ----------வெள்ளைச்சாமி
வானிலை ஆய்வாளர்-----------கார்மேகம்
விவசாயம்---------------------பச்சையப்பன்
தலையாரி---------------------பூமிநாதன்
முடிவேட்டுவோர்---------------கொண்டையப்பன்
பிச்சைக்காரர்-------------------பிச்சைமூர்த்தி
ஒப்பனைகாரர்------------------சிங்காரம்
பால்காரர்----------------------பசுபதி, பால்ராஜ்
நாய் பயிற்சியாளர்--------------நாயகன்
பாம்பாட்டி----------------------நாகராஜ், நாகப்பன்
மலையேருவோர்----------------ஏழுமலை
வேல் எரிவோர்-----------------வேலாயுதம்
உயரம்தாண்டுவோர்-------------தாண்டவராயன்
பளு தூக்குவோர்----------------பலராமன்
பேட்ஸ் மேன்------------------தான்டியப்பன்
பௌலேர்----------------------பாலாஜி
கார் டிரைவர்-------------------பார்த்தசாரதி
அரசியல்வாதி------------------பொய்யாமொழி (பொய்யெமொழி)

நான் காதல் மயக்கத்திலா...?

அதீத‌மாய் நானுன்னை
நேசித்த‌தும் நிஜ‌ம்
அதை நிஜ‌மென‌ நீ
ந‌ம்ப‌ ம‌றுத்த‌தும் நிஜ‌ம்.

---------------------

இல‌க்கில்லாம‌ல்,
திசைய‌றியாம‌ல்
வெறுமையாய் தொட‌ர்கிற‌து
என் ப‌ய‌ணம்
உன் நினைவுகளைச்...
சுமந்தபடி.

-----------------------

வில‌கியிருப்ப‌துதான்
உன் விருப்ப‌மென்றால்,
வில‌க‌லுக்கான கார‌ண‌த்தையாவ‌து
சொல்லிவிடு,
விருப்பமாய் நீ வாழவே,
விடைபெறுகிறேன்
நான் இந்த உலகை விட்டு.

------------------------

நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?

-----------------------

சந்தோஷமானாலும் சரி
துக்கமானாலும் சரி
காதலின் உணர்வு காற்றில்
இலவம் பஞ்சு பறப்பதுபோல,
மென்மையான….
தள்ளாட்டமான
ஒரு மயக்கம்தானே...!!!!

----------------------

என் கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.


கவிதை உபயம் - கலைமதி திலகநாதன் -



Friday, June 18, 2010

நமது உடல் எடையை குறைக்க.....!!

உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.



(945)
விளக்கம்:

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.





என்னடா இவன் திடீரேன்று மருத்துவம் பக்கம் போயிட்டானே என எண்ணவேண்டாம். மருத்துவம் மற்றும் உடல்நல சம்பந்தமான சாப்ட்வேர் கிடைக்கவே அதை பற்றி பதிவிடுகின்றேன்.நமது உடலுக்கு தேவையான உணவு வகைகளையும் அதன் சத்து அளவுகளையும் உடல் எடையை நமது கண்ட்ரோலுக்கு கொண்டுவருவது பற்றியும் இந்த சாப்ட்வேரில அறிந்துகொள்ளலாம்.5.5 எம்.பி.கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில நமது பிறந்த தேதி மற்றும் பெயர் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்களை தரவேண்டும்.

நமது உடல் எடையை குறைக்க ஓரு குறிப்பிட்ட நாளையும் குறைத்தபின் வரும் எடையை குறிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தேவையான எடையையும் தேதியையும் குறிப்பிட்டு Calculate கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு அறிக்கை ஓன் று கிடைக்கும். கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.
இப்போது உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில வலதுபுறம் உணவு வகைகள் தெரியவரும்.
நாம் சாப்பிடும உணவு வகைகள் லிஸ்ட் எல்லாம் கிடைக்கும். அதில நாம் சாப்பிடும் உணவு பிரிவை தேர்வு செய்யுங்கள்.

நான் பிஸ்கட்டை தேர்வு செய்தேன். அதற்கான Food Log Entry கான விண்டோ கீழே கிடைக்கும்.

அதில் அந்த பிஸ்கட்டில் உள்ள Calories.Fat,Carb,Protein எவ்வளவு அளவுகள் உள்ளன என மொத்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதைப்போல நமது தினசரி செயல்களையும் தேர்வு செய்யவேண்டும். நான் பாத்ரூமில் நடனம் என்பதை தேர்வு செய்து நேரத்தையும் 20 நிமிடம் என குறிப்பிட்டேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில இடதுபுறம் உள்ள Body Log கிளிக் செய்து நமது மெடிக்கல் விவரங்களை குறிப்பிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மருத்துவம் -டாக்டர் - உடல்கட்டுப்பாடு என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை இதில் உள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து உடலை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.ஒவ்வோருவரின உடல் எடை - உணவு பழக்கங்கள் - வேலைகள் வெவ்வேறாக இருக்கும் என்பதால் இதைப்பற்றி மேலோட்டமாக பதிவிட்டுள்ளேன்.நன்கு படித்துப்பார்த்து பயனடையுங்கள்.
வாழ்க வளமுடன்.