Sunday, June 13, 2010

என்னவளே..!!!

இன்றுவரை என் இதயத்தின்
ஆழத்தை உனக்குக் காட்டியதில்லை.
உன்னைப் பற்றிய என் கனவுகளை
உனக்கு நான்கூறியதும் இல்லை
ஆனாலும்
உனக்குத் தெரியும்.
நான் உன் நிழலைக் கூட
காதலிக்கிறேன் என்று .

-------------------

உன்னுடைய நிராகரிப்புகளுக்குப்
பதிலாய் இன்னும் அதிகமாய்
காதலையே தருகிறேன்.
உனக்கு... நிராகரித்தல் பழக்கமாகி விட்டது.
எனக்கு... காதலித்தல் வழக்கமாகி விட்டது.

------------------------

உன்னுடன் பேசும் போதெல்லாம்
பார்க்க வேண்டும் எனத் தோன்றும்
ஆனால் பார்க்கும் போது பேசத் தோன்றுவதில்லை.

------------------------

என் பெயரை கேட்டாலே
உன் பெயரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாகத் தெரிகின்றது.

-------------------------

காதலிப்பதற்கு நீ இருக்கின்றாய்.
என்ற காரணமே போதுமாய் இருக்கின்றது இந்த மண்ணில் நான் சுவாசிப்பதற்கு...!!

-------------------------

நீ நடந்தால் உன்னுடனேயே நடக்கும்,
நீ சிரித்தால் உன்னுடனேயே சிரிக்கும்,
நீ அழுதால் உன்னுடனேயே அழும்,
உன் நிழல் போலவே,
உன்னில் நான் வைத்திருக்கும் காதலும்.

கவிதை உபயம் - கலைமதி திலகநாதன்

No comments: