Sunday, June 13, 2010

முக்கோணக்காதல்....!!

11


"என்னைக் கொஞ்சம்
மாற்றி" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை
பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.

"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து
பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "

" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..

"வரேன் என்று சொல்லிட்டேன்....

" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"

" ஆமாம்.. "

"அப்போ ராஜாவின் நிலைமை??"

"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?" "ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "

கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக்
எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும்
அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு
புன்னகை..

கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..??

"இல்லை 15 நிமிடம் தான்.. "

கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..

"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..

கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி
சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..

"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..

கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று
ஆசைப்படுறேன்.. ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..

No comments: