உனக்கும் எனக்கும்
இடையில் உள்ள வெளியில்
பெரிய இடைவெளி உள்ளது
அதனை காதலிட்டு நிரப்பிக்கொண்டு இருக்கிறது
நம் இத்தனை நாள் பிரிவு
---------------------------------------மேகம் கொடுத்த மழை
மண் வாசம் விட்டு செல்லும்...
நீ கொடுத்த காதல் – என் உயிரை
எடுத்துசென்றதா ??? கொடுத்து சென்றதா ??
---------------------------------------எத்தனை முறைதான்
உன்னால் என் இதயத்தை உடைக்க முடியும் ?..
காதல் உன்னைப்போல அசாதாரணமானது
நீ உடைக்க உடைக்க
அது ஒட்ட வைத்து கொண்டே இருக்கும்….!!
------------------------------------நான் பார்க்கும் பொருட்கள் எல்லாம் நீயாகத் தெரிகின்றது என் கண்களை மூடினால் நீ மட்டுமே தெரிகின்றாய்.
-------------------------------------விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன், எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்.
------------------------------------வாசிக்கும் பழக்கம் இல்லாத என்னை உன் காதல் கடிதங்களுக்கு வாசகி ஆக்கி விட்டாய்.
-------------------------------------ஒரு நாள் பேசாது விட்டாலே கோபிக்கும் காதல் பல காலம் ஆனாலும் தொடரும் நட்பு..!!
--------------------------------------என் கவிதைகளின் கண்ணீர் துளிகளில் துளிர் விட்டுக்கொண்டு இருக்கின்றது என்னோடான உன் ஞாபகங்கள்.
----------------------------------------காற்றில் கலந்து கானம் இசைக்கும் புல்லாங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி ஆனால் உன்னைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே.
--------------------------------------- என் இதயத்தில்- நீ
இனிமைக்கு- நீ
என் இசை வசந்தம்- நீ
காற்று உள்ள வரை- என்
இரவுக்கு துணை- நீ.
---------------------------------------என் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களை படித்த நாட்களை விட அதில் உன்னைப் பார்த்த நாட்களே அதிகம்
-----------------------------------------இந்தக் காம்பில் இந்தப்பூ எப்படி மலர்ந்தது என்று இந்த உலகமே என் கவிதைகளைப் பார்த்து வியக்கின்றது ஆனால் அதற்க்கு தெரியாது என் கவிதைகளுக்கு எல்லாம் விதையாய் இருப்பது நீ என்று...........
கவிதை உபயம் - கலைமதி திலகநாதன்.
No comments:
Post a Comment