Monday, June 14, 2010

நான் எதுவும் செய்ய முடியாது நிக்கிறேன்
நிழல் இல்லாத வெம்மை மணலில் கால்கள் புதைந்ததால்.

***********

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

***********

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
உறவாக இல்லை என் உயிராக...!!

***********

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்.
அதில் சிலருடைய காதலோ
மனதில் ஆரம்பித்து மணவறையில் முடிகின்றது
எனினும் சிலரது காதல்
கண்களில் ஆரம்பித்து கண்ணீரில் முடிகின்றது.
இதில் எனது காதல் எப்படியோ?

***********

உன் விழிகள் என்னை காணத்துடித்தால்
உன் இமைகளை மெதுவாக மூடு
உன் இதயம் துடிக்கும் தூரத்தில் நான் வந்து இருப்பேன்

***********

ஒவ்வொரு இரவிலும்
ஒரு புல்லாங் குழல்
காற்றில் கசிந்து கசிந்து காதில் விழுகிறது.
சொல்லத் தெரியாத சோகங்களை
அது அள்ளிச் செல்கின்றது.

***********

காதல்:-
அலைகள் தீண்ட காத்திருக்கும் கரைகள் போல..
வண்டுகள் தீண்ட காத்திருக்கும் மலர்கள் போல...
மேகங்கள் தீண்ட காத்திருக்கும் நிலவு போல...
உன் கண்கள் தீண்டும் வரை காத்திருக்கும் என் காதல்.

***********

காதலின் வயது அது..
எத்தனை கோடி அத்தனை காலம் நாம் வாழலாம் வா..!!
நீ ஒற்றை நிமிடம் உன்னை பிரிந்தால் உயிரும் வற்றி போகும்...!!!
பாதி நிமிடம் வாழ்ந்தால் கூட கோடி வருஷம் ஆகும்...!!!

கவிதை உபயம் - கலைமதி திலகநாதன்-

No comments: