வண்ணங்களோடு தூரிகை விளையாட...........
எண்ணங்களோடு விரல்கள் நடனமிட.............
கற்பனைகளோடு மனது கரைபுரண்டிட..........
மனது எனும் நகரத்தை அழகுபடுத்திட............
அந்த நகரத்தை ஓவியங்களாக வரைந்திட......
அந்த ஓவியங்களின் கற்பனையாக நீ இருந்திட...
அந்த ஓவியங்கள் நிரந்தரமாக என் மனதில் இருந்திட....
அந்த ஓவியங்களால் என் மனது கண்காட்சியகமாய் மாறிட....
என் கற்பனைகளை நிறைவேற்றிட.....
எப்போது தோன்றுவாய் ஓவியங்களாக .......
என் மனதில் நீ ........!
அது வரை நான் .....!
வண்ணங்களோடும் ......!
தூரிகையோடும்.....!
காத்திருப்பேன் உனக்காக ஓவியமே.....!
No comments:
Post a Comment