அன்பு காட்டுவதில் தாயாய்.....
கண்டிப்பதில் தகப்பனாய்.....
வழிகாட்டுவதில் ஆசானாய் ....
துணை நிற்பதில் தோழனாய்.....
துயரங்களில் தோழியாய்.....
என் கடந்த காலத்திற்கு செவிகொடுக்கவும்.....
என் நிகழ் காலத்திற்கு மெருகூட்டவும்.....
என் எதிர் கால வாழ்விற்கு உரு கொடுக்கவும்....
என் மன காயங்களிற்கு மருந்திடவும்.....
என்னை புரிந்து கொள்ளவும்....
எனக்காக ஏங்கிடவும்....
என் நலம் காத்திடவும்....
அவளுக்காக வாழ்ந்திடவும்.....
மீதமுள்ள என் வாழ்நாளை அவளுக்காக அர்ப்பணித்திடவும்....
என் வாழ்வு முழுமை அடைந்திடவும்....
எனக்கொரு அன்பான தோழி தேவை.....!
ஏன்... அது நீயாக இருக்கக் கூடாது..???
No comments:
Post a Comment