காதல் வந்தால்...!!!
வாழ்க்கை இனிக்கும்
வசந்தம் வரும்
கவிதை வரும்...
பசிமறப்பாய்
தூக்கம் தொலைப்பாய்
தனிமையில் பேசுவாய்
தனியாய் சிரிப்பாய்
உனக்குள்ளே உரைநடை
நிகழ்த்துவாய்
கற்பனைகள் ஊற்றெடுக்கும்
கவிதைகள் தேன்சுரக்கும்!
அப்போதுதான் - நீ
தமிழை நேசிப்பாய்
பழைய வார்த்தைகளைத்
தேடிப்பிடித்து அர்த்தங்களை
அகராதியில் தேடுவாய்
காதல் கவிதைகள்
கற்கண்டாய் இனிக்கும்
நீ
காதலிப்பவருக்கே தெரியாமல்
அவள் ஆடைகளை
வாசம் பார்ப்பாய்
கந்தலோ... கிழிந்தலோ...
கையில் கிடைத்தால்
கண்காட்சி பொருளாய்
பத்திரப்படுத்துவாய்...
இது-
காதலா...காமமா...
உனக்குள்ளே கேள்விகள் எழும்
ஒருவழியில் சமாதானமாவாய்!
No comments:
Post a Comment