Tuesday, June 15, 2010

காதலி கோபம் ..!!

ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டாமே!
என் முத்தவிசைக்கு எதிர் விசை எங்கே என்றால்
போடா என்று வெட்கக் கோபத்துடன் ஓடுகிறாய்

நகை அணிந்து வந்து அழகாய் இருக்கிறேனா என்று கேட்டாய்
நகை அழகாய் இருக்கிறது என்றேன்
பொய்க் கோபத்துடன் முறைக்கிறாய்
நான் சொன்னது உன்னால் அந்த நகை அழகாகிவிட்டது என்று

கோபப்படுவது அழகல்ல என்றாலும்
நீ கோபப்படும் போது அழகாயிருக்கிறாயே
உன் செல்லக் கோபத்திற்க்காக
தினம் தவறாமல் தவறு செய்யகிறேன்

No comments: