Tuesday, June 15, 2010

கருப் பதிவு..!

ஒரு வழியாக நான் செய்துகொண்டிருந்த ப்ராஜக்ட் போனவாரம் ரிலீஸ் செய்துவிட்டோ ம். மிகவும் போர் அடிக்கிறதென்று Google படத்தேடலில் (image searching) படங்களை தேடி கொண்டிருந்த போது, அரிதான ஒரு படம் பார்த்தேன். மிகவும் ரசிக்கவேண்டிய படம். அதை பார்த்து கற்பனையில் கிறுக்கியவை தான் இவை.

Mummy!
Sorry! Sorry!! அம்மா,
நான் தான் delivery ஆகப்போற உன் child பேசுறேன்.
சே! நீ computer டப்பாவை தட்ற வேலை பார்த்தாலும் பாக்கிற, இப்பவே எனக்கு English கலந்து தான் பேசவருது.

அப்பறம், எனக்கு A, B, C லே ஆரம்பிக்கிற பேர் எல்லாம் வச்சுடாதே,
நல்லா M, N... S இதுல ஆரம்பிக்கிற மாதிரி பேர் வை.
பரீச்சை எழுதும்போது alphabetical order-லே எனக்கு முன்னாடியும் பின்னாடியும் யாராவது இருப்பாங்க
அப்பதான் நான் discuss பண்ணி எழுத முடியும்.

அப்பா, government-ல வேலை பார்க்கிறாறா இல்லை private-லயா?
வீட்டு வாடகை 6000, 7000 இருக்குன்னு கேள்விபட்டேன்,
அதனால இப்பவே அப்பாவ ஒரு வீடு வாங்க சொல்லிடு,
ஒரு 2000 சதுர அடியில.

ம்ம்ம்.. மறந்துட்டேன், ஒரு காரும் வாங்க சொல்லு.
Hyundai Santro போதும்.
இப்ப இருக்கிற டிராபிக்கை பார்த்த என்னை கூட்டிட்டு பஸ்லே எல்லாம் போக முடியாது.
அதுவில்லாம call taxiக்கு பணம் குடுத்து மாளாது.

நான் விளையாட்றதுக்கு பெரிய பொம்மையெல்லாம் வேணும்.
என்னவிட பெரிசா இருக்குமே, அந்த கரடி பொம்மை ஒரு நாலு வாங்கணும்.
toys-க்கு கூட VAT போட்டாங்களாமே!
கொஞ்ச அதிகமாகவே பணத்த சேத்து வச்சுக்கோங்க!

என்னது! LKG சேக்கிறதுக்கு 50,000 செலவாகுமா?
அடப்பாவிங்களா! அப்ப 2000 சம்பளம் வாங்கிறவங்க குழந்தை எப்படி தாண்டா படிக்கும்?
இப்படியே போன கையளவு கூட படிக்கமுடியாது போல,
அப்பறம் எங்கே கடலளவு படிக்கிறது!!?

என்னை தமிழ் medium சேக்கபோறீயா இல்ல English medium சேக்க போறீயா?
இப்பவே தமிழ் படத்துக்கு தமிழ்ல தான் பேர் வைக்கனும்ன்னு சொல்றாங்க!
நான் படிக்க வர்றதுக்குள்ள English medium எல்லாம் இருக்குமான்னு தெரியல?
எதுக்கும் இதெல்லாம் கேட்டு வச்சுக்கோ!

உனக்கு yahoo.com-ல account இருக்கா இல்ல yahoo.co.in-ல account இருக்கா?
நீ ஒண்ணு பண்ணு, இப்பவே எனக்காக ஒரு account create பண்ணி வச்சுடு,
அப்பறம் கிடைக்குமோ கிடைக்காதோ!
gmail.com கூட நல்லா இருக்குன்னு கேள்விபட்டேன், அப்படியா??

கடைசியா ஒரு விஷயம்!
நான் உனக்கு முதல் பிள்ளைன்னா என்னை நீ பெத்துக்கோ!
இல்ல எனக்கு அண்ணாவோ அக்காவோ இருக்காங்கன்னா
என்னை கலச்சுட்டு ஒரு அனாதை பிள்ளையை தத்தெடுத்துக்கோ!!!

No comments: