நேசித்ததும் நிஜம்
அதை நிஜமென நீ
நம்ப மறுத்ததும் நிஜம்.
---------------------
இலக்கில்லாமல்,
திசையறியாமல்
வெறுமையாய் தொடர்கிறது
என் பயணம்
உன் நினைவுகளைச்...
சுமந்தபடி.
-----------------------
விலகியிருப்பதுதான்
உன் விருப்பமென்றால்,
விலகலுக்கான காரணத்தையாவது
சொல்லிவிடு,
விருப்பமாய் நீ வாழவே,
விடைபெறுகிறேன்
நான் இந்த உலகை விட்டு.
------------------------
நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?
-----------------------
சந்தோஷமானாலும் சரி
துக்கமானாலும் சரி
காதலின் உணர்வு காற்றில்
இலவம் பஞ்சு பறப்பதுபோல,
மென்மையான….
தள்ளாட்டமான
ஒரு மயக்கம்தானே...!!!!
----------------------
என் கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.
கவிதை உபயம் - கலைமதி திலகநாதன் -
No comments:
Post a Comment